16.12.13

இந்தியாவின் நிதி உதவிக்கு ஆப்கன் அதிபர் பாராட்டு



இந்தியாவின் நிதி உதவியினால் ஆப்கனின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என்று அந்நாட்டு பிரதமர் ஹமீது கர்சாய் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கர்சாய், புணேயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "சர்வதேச உறவுகள்' குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆப்கனுக்கு போதுமான அளவு இந்தியா நிதி உதவி அளித்துள்ளது. அது, பயங்கரவாதத்திலிருந்து மீண்டு, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏதுவாக இருக்கும். பயங்கரவாதத்துக்கு எதிராக மக்களைக் காக்கும் பொறுப்பு நமக்கு உண்டு. ஜனநாயகத்தின் மீதான எதிர்மறை எண்ணங்கள் தவறு என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. கல்வித் துறையில் ஆப்கன் மேம்பாடு அடைய இந்தியா அளித்து வரும் உதவிகள் பாராட்டுக்குரியது. ஆப்கனைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயின்று வருகின்றனர் என்று கர்சாய் தெரிவித்தார்.

No comments:

Post a Comment