16.12.13

தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

தில்லியில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடிப்பதால் அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது.
தில்லி அரசியல் நிலவரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு துணைநிலை ஆளுநர் நஜிப் ஜங் சனிக்கிழமை அறிக்கை அனுப்பினார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் பதிலுக்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார். தில்லி சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம், 18ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் தில்லியில் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைக்கப்படவில்லை என்றால், குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்படும் சூழல் ஏற்படும்.

No comments:

Post a Comment