16.12.13

அறிவுத் திறனில் ஐன்ஸ்டீனுக்கு இணையான 4 வயது பிரிட்டன் சிறுவன்

பிரிட்டனைச் சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு இணையான அறிவுத் திறன் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் தெற்கு யார்க்ஷைர் அருகே உள்ள பார்ன்ஸ்லே நகரில் வசிக்கும் தம்பதியரின் மகன் செர்யன் சராபி (4). சராபிக்கு குழந்தைகளுக்கான அறிவுத் திறன் கண்டறியும் சோதனையை உளவியல் நிபுணர்கள் மேற்கொண்டனர். அதில் சராபிக்கு அறிவுத் திறனின் அளவு 160 புள்ளிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இயற்பியல் விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸ் ஆகியோருக்கு இணையான அறிவுத் திறன் சராபிக்கு இருப்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்வித் துறையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் பீட்டர் காங்டான் கூறுகையில், ""சராபியிடம் ஆச்சரியப்படவைக்கும் அளவிற்கு அறிவுத் திறனும், சொல் வளமும் நிறைந்துள்ளது'' என்றார்.

No comments:

Post a Comment