16.12.13

தலிபான் தளபதி கைது

கராச்சியில் தேரிக்-இ- தலிபான் தீவிரவாத அமைப்பின் மூத்த தளபதி அபு ஹம்ஸா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கராச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த தகவலை குற்றப்புலனாய்வு துறை தலைவர் மஜார் மஸ்வானி தெரிவித்தார். தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் அபு ஹம்ஸா 36ஆவது இடத்தில் இருந்ததாக குறிப்பிட்ட அவர், அபு ஹம்ஸா கைது செய்யப்படுவதற்கு முன்பு லாகூரில் உள்ள அரசு அலுவலகத்தில் பணியாற்றி
வந்ததாக கூறினார்.

No comments:

Post a Comment