28.12.13

நடிகை ரஞ்சிதாவுக்கு சன்யாச தீட்சை அளித்தார் நித்தியானந்தர்



நடிகை ரஞ்சிதாவுக்கு வெள்ளிக்கிழமை சன்யாச தீட்சை அளித்தார் நித்தியானந்தர்.
பெங்களூரு பிடதியில் அமைந்துள்ள நித்தியானந்த தியான பீடத்தின் பீடாதிபதி சுவாமி நித்தியானந்தரின் பிறந்த நாள் ஜனவரி 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை தியான பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகை ரஞ்சிதாவுக்கு சன்யாச தீட்சை அளித்தார் நித்தியானந்தர்.
அப்போது, "சன்யாசத்தை கடைப்பிடிப்பேன்' என்று நடிகை ரஞ்சிதா உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, ரஞ்சிதாவுக்கு "மா ஆனந்தமயி' என்ற பெயர் சூட்டப்பட்டது. ரஞ்சிதாவுடன் மேலும் 40 பெண்களும் சன்யாசியாக தீட்சை பெற்றனர்.
பசவமார்க்க பீடாதிபதி எதிர்ப்பு: ரஞ்சிதாவுக்கு தீட்சை அளித்தது குறித்து பெங்களூரு பசவமார்க்க பீடத்தின் பீடாதிபதி மாதே மகாதேவி கூறியது:
நடிகை ரஞ்சிதாவுக்கு சன்யாச தீட்சை அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. நித்தியானந்தர்- ரஞ்சிதாவின் சர்ச்சை இன்னும் நினைவில் உள்ளது. இந்த நிலையில், தீட்சை எடுத்துக் கொள்வது எந்த வகையில் சாத்தியம்? சன்யாசியாக வாழ்வது எளிதல்ல.
சன்யாசிகளிடம் தியாகம், சேவை மனப்பான்மை இருக்க வேண்டும். எல்லா சுக போகங்களையும் அனுபவித்துவிட்டு சன்யாசியாக முடியாது என மாதே பசவகீதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment