28.12.13

கெலாட் அரசு மீதான டெண்டர் முறைகேடு புகார்: விசாரணை நடத்த சமாஜவாதி வலியுறுத்தல்

ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஆட்சியில் பொதுப்பணித் துறையில் முறைகேடாக அதிக தொகைக்கு டெண்டர் வழங்கப்பட்டது குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமாஜவாதி கட்சி வலியுறுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநில முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தேர்தல் நிதி திரட்டுவதற்காக சில ஒப்பந்ததாரர்களுக்கு 1,629 ஒப்பந்தங்கள் கூடுதல் தொகைக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து சமாஜவாதி கட்சியின் மாநில துணைத் தலைவர் அனில் சிங் ஷெகாவத், ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
அவசர அவசரமாக வெளியிடப்பட்ட அந்த டெண்டர் கோரிக்கை வழக்கமான தொகையைவிட அதிகமாக இருந்தது மட்டுமின்றி, சில குறிப்பிட்ட நிறுவனங்கள் ஆதாயம் பெறும் வகையில் சிறப்பு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
சுமார் ரூ.20,000 கோடிக்கான அந்த டெண்டர் நடைமுறைகள் முழுவதும் தேர்தல் நிதி திரட்டுவதற்காகவே முந்தைய அரசால் மெற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கிறோம்.
தற்போது ராஜஸ்தானில் பதவி ஏற்றுள்ள பாஜக அரசு, முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கடைசி ஆறு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட டெண்டர் தொடர்பான முடிவுகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
அந்த டெண்டர் நடைமுறையில் உள்ள முறைகேடுகள் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்றும் அனில் சிங் ஷெகாவத் வலியுறுத்திக் கூறினார்

No comments:

Post a Comment