25.12.13

ராணுவ வீரர்களுக்காகப் பாடுவது 50 ஆண்டு லட்சியம்: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்



ராணுவ வீரர்களுக்காகப் பாடுவது தனது 50 ஆண்டு கால லட்சியம் என்று, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் 255-ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தங்கராஜ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறியது:
இந்திய-பாகிஸ்தான் போரின்போது நான் சிறுவனாக இருந்தேன். அச் சமயம் ராணுவ வீரர்களுக்கு நாட்டில் உள்ள இசைக் கலைஞர்கள் சார்பில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போது, எனது மனதில் ராணுவ வீரர்களுக்காகப் பாடும் வாய்ப்புக் கிடைக்குமா என்ற ஏக்கம் இருந்தது.
நாட்டிற்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களுக்காக இசை நிகழ்ச்சியை நடத்துவதால் எனது 50 ஆண்டுகால லட்சியம் நிறைவேறியுள்ளது என்றார்.
இதில், எஸ்.பி.சைலஜா, எஸ்.பி.பி.சரண், எம்.ஆர்.சி. கமாண்டர் எஸ்.சுரேஷ்குமார், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment