25.12.13

ஏசுநாதர் மணல் சிற்பம்



ஒடிஸாவின் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உலகிலேயே மிகப் பெரிய ஏசுநாதர் மணல் சிற்பத்தை புரி கடற்கரையில் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இந்த மணல் சிற்பம் 75 அடிக்கு 35 அடி அளவு கொண்டது. சாதாரண மணலுடன் வண்ண நிற மணலையும் கலந்து ஆயிரம் டன் எடையில் அவர் உருவாக்கியிருக்கும் இந்த மணல் சிலையில் ஏசுநாதர், மேரியம்மை, சாந்தா கிளாஸ் சிற்பங்கள் அடங்கியுள்ளன.
புரி சுதர்சன் மணல் சிற்பக் கலைக்கூடத்தில் பயிலும் தனது மாணவர்கள் 25 பேர் உதவியுடன் 3 நாட்கள் உழைத்து இந்த பிரம்மாண்ட சிற்பத்தை சுதர்சன் உருவாக்கியுள்ளார். டிச.24 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை இச்சிற்பம் காட்சிக்கு இருக்கும்.
புரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்கு கடற்கரையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட சிற்பத்தைக் கண்டுகளித்து வருகின்றனர்.
சுதர்சன் இதற்கு முன் 7 உலக சாதனைகளைப் படைத்திருக்கிறார். லிம்கா சாதனை புத்தகங்கள் அவை இடம்பெற்றுள்ளன.
உலகிலேயே மிகப் பெரிய ஏசுநாதர் மணல் சிற்பத்தை உருவாக்குவதைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு லிம்கா சாதனைப் புத்தகத்தின் மூத்த ஆசிரியர் முத்தன்ன சிங் எனக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment