25.12.13

முதன்முறையாகப் பாடிய ஜாக்கிசான்!


உலகம் முழுவதும் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர் ஜாக்கிசான். இவரைப் பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. இவர் நடிப்பில் வெளிவந்த ‘போலீஸ் ஸ்டோரி’, சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன் தொடர்ச்சியாக தற்போது ‘போலீஸ் ஸ்டோரி 2013’ படத்திலும் நடித்திருப்பதோடு, அந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார்.

உலகம் முழுவதும் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் படம், தமிழகத்தில் பொங்கல் வெளியீடாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வர இருக்கிறது. தமிழகம் முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்திற்காக ஜாக்கிசான் முதன்முறையாக பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் தான் தற்போது யு டியூப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தை, சுரபி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.மோகன் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். ‘தளபதி’, ‘முத்து’, ‘குருவி’, ‘ராம்போ-3’ உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கிலப் படங்களை என்.எஸ்.சி. ஏரியாவில் 32 வருடங்களாக விநியோகம் செய்துள்ள இவர், இந்தப் படத்தை 3-டி.யில் வெளியிடுகிறார்.

No comments:

Post a Comment