25.12.13

ரஜினியை கவர்ந்த தலைமுறைகள்


சமீபத்தில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘தலைமுறைகள்’ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப்படம் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தாத்தாவாக பாலுமகேந்திராவும். பேரனாக மாஸ்டர் கார்த்திக்கும் நடித்திருக்கிறார்கள். சசிகுமார் தனது ‘கம்பெனி புரடக்‌ஷன்’ சார்பாக படத்தை தயாரித்திருக்கிறார். இரு தினங்களுக்குமுன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப்படத்தை பார்த்திருக்கிறார்.
படம் பார்த்து முடித்ததுமே இயக்குனர் பாலுமகேந்திராவையும் சசிகுமாரையும் போனில் அழைத்து நீண்டநேரம் பாராட்டியதோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். 28 வருடங்களுக்கு முன்பு பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment