25.12.13

கவர்ச்சி நடிகை ‘பாவாடை-தாவணி’யில் குத்தாட்டம்



‘வடகறி’ படத்தில் ஜெய்யுடன் இணைந்து பாங்காங்கில் குத்தாட்டம் போட்டு வருகிறார் சன்னி லியோன்.
கவர்ச்சிப் புயலான சன்னி லியோன் தயாநிதி அழகிரி தயாரிக்கும் படமான” வடகறி” படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இடையில் வடகறி படத்தில் சன்னி லியோன் இருக்கிறாரா, இல்லையா என்ற குழப்பமான செய்திகளும் வெளியாகின. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெய்யுடன் சன்னி லியோன் ஆடிப்பாடிய பாடல் காட்சி தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சன்னி லியோனின் தீவிர ரசிகரான ஜெய்யின் கனவுப் பாடலாக இப்பாடல் வருகிறதாம். இப்பாடலுக்காக சன்னி லியோன் பாவாடை, தாவணியிலும், ஜெய் வேட்டி சட்டையிலும் நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டதாம். ‘பாவாடை, தாவணி’யில் தன்னைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ந்தாராம் சன்னி. அழகான ஆடையாக இருக்கிறது என்றும் பாராட்டினாராம்.
வடகறி படத்தில் ஜெய்யுடன் இணைந்து ஸ்வாதி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனரான சரவண ராஜன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

No comments:

Post a Comment