25.12.13

வருசநாடு அருகே வளர்ச்சி பணிகளை பார்வையிட சென்ற தேனி தொகுதி எம்.பி கார் முற்றுகை


தேனி மாவட்டம்,வருசநாடு பகுதியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய சென்ற தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆருண் வளர்ச்சி பணிகளை பார்வையிடுவதற்கு வருசநாடு பகுதிக்கு செவ்வாய்கிழமையன்று சென்றார்.காலையில் சிறாப்பாறையில் நடைபெற்று வரும் மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதி அளிப்பு திட்டத்தினை பார்வையிட்டார்.பின்பு பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
மாலை 6 மணியளவில் வருசநாடு அருகே தங்கம்மாள்புரத்தில் நடைபெற்று வரும் மேல்நிலை குடிநீர் தொட்டி பணிகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது இரு சக்கரவாகனத்தில் வந்த அதே ஊரை சேர்ந்த நபர் எம்பியின் காரை வழிமறித்து,தொகுதிக்குள் வரவேயில்லை இப்போது தேர்தல் வருவதால் வருகிறீர்களா என்று கூறி காரை மறித்து கொண்டார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து காரை வழிமறித்த நபருடன் எம்.பி பேச்சுவார்த்தை நடத்தினார்.அதன்பின்னும் போகவிடாததால் பொதுமக்கள் அவரை பிடித்து அப்பகுதியை விட்டு அகற்றினார்கள்.பின்னர் அந்த நபரை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment