25.12.13

பி.எஸ்.என்.எல்.அலுவலகம் மீது தாக்குதல்: ஊழியர் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 வியாசர்பாடி பி.என்.டி. காலனியைச் சேர்ந்தவர் மு.வெங்கடேஷ் (35). பி.எஸ்.என்.எல். ஊழியரான வெங்கடேஷ், தனது சேமநல நிதி கேட்டு கீழ்ப்பாக்கம் கெல்லீஸில் உள்ள பி.எஸ்.என்.என். அலுவலகத்தில் 2 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தாராம். ஆனால் அந்த சேமநல நிதி அவருக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்ததாம்.
 இந்நிலையில் வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை காலை அந்த அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு தனது சேமலநிதியை வெங்கடேஷ் கேட்டாராம். அங்கிருந்த ஊழியர்கள், அவரிடம் சேமநல நிதி வரவில்லை என கூறினராம். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் ஊழியர்களிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.
 அங்கிருந்த கண்ணாடி கதவையும், கண்காணிப்பு கேமராவையும் வெங்கடேஷ் உடைத்தாராம். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான அதிகாரிகளின் இரு கார்களின் கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்ததாக கூறப்படுகிறது.
 இது குறித்து பி.எஸ்.என்.எல். நிர்வாகம், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வெங்கடேஷ் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் போலீஸார் வெங்கடேஷை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment