25.12.13

புதுக்கோட்டை: வரதட்சனை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார் கைது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருமணம் நிச்சயம் செய்தபிறகு பெண்ணிற்கு வயது அதிகம் என்று வரதட்சனை அதிகம் கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டாரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காட்டைச் சேர்ந்தவர் அப்துல் ஹமீது மகள் மதினா(28). இவருக்கும் புத்தாம்பூரைச் சேர்ந்த சாகுல்ஹமீது மகன் அபுபக்கர்சித்திக்(29) என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன்படி நாளை டிச.25-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. ஆனால் நிச்சயம் செய்தது முதல் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிற்கு மாப்பிள்ளையைவிட வயது அதிகம் என்று சர்ச்சையை கிளப்பி பேசியதை விட கூடுதல் வரதட்சனை கேட்டு பிரச்சினை செய்து வந்துள்ளனர்.
நாளை  திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் எந்த ஏற்பாட்டையும் மணமகன் வீட்டார் செய்யவில்லை.  இதுபற்றி கேட்டதற்கு திருமணம் நடக்காது என்று கூறியுள்ளனர்.அதிர்ச்சியடைந்த பெண்வீட்டார்,உறவினர்கள் பலர் பேசியும் மணமகன் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.இதனால் மனமுடைந்த மதினா இதுகுறித்து ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அப்துல் சித்திக்கின் அண்ணன்கள் அயூப்கான், முகமது சக்கரியா, சகுபர்அலி, அக்கா பரக்கத் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான மணமகன் அபுபக்கர்சித்திக்,அவரது அம்மா ரகிமாபீவி ஆகியோரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment