25.12.13

ஜில்லா படத்தின் எடிட்டர் மாற்றம்



அறிமுக இயக்குனர் நேசன் இயக்கத்தில் விஜய, மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், பரோட்டா சூரி என நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ள திரைப்படம் ஜில்லா.
அரசியல், பஞ்ச் என எதுவும் இல்லாமல் குடும்ப பொழுதுபோக்குப் படமாக உருவாகி வருகிறது. டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் ஆடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படம் விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது. எனவே, படத்தின் புரொடக்ஷன் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறதாம். இந்நிலையில் ஜில்லா படத்தின் எடிட்டர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுளளனர்.பிரவீன், ஸ்ரீகாந்தின் எடிட்டிங்கை நடு நடுவே கவனித்து வந்த இயக்குனர் நேசன், ஒரு கட்டத்தில் இது சரிப்பட்டு வராது என்று நினைத்தாராம்.
உடனே இது குறித்து விஜய்யிடம் பேசப்பட்டதாம். உங்களுக்கு பிடிக்கலேன்னா எனக்கும் ஓ.கே தான். உங்க இஷ்டம் எதுவோ, அதை செய்யுங்க என்று அவரும் க்ரீன் கொடியை ஆட்டியதால், இந்த ரெட்டையர்கள் படத்திலிருந்தே நீக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக டான் மாக்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஜக்குபாய் படத்தின் எடிட்டர்.

No comments:

Post a Comment