25.12.13

ஊழலில் ஈடுபட்டவர்களை பாஜக, காங்கிரஸில் இணைக்க முயற்சி: எச்.டி.குமாரசாமி

ஊழலில் ஈடுபட்டவர்களை பாஜக, காங்கிரஸில் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித்தலைவருமான எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக பேசிவருகிறார். ஆனால் அவரது கட்சி கர்நாடகத்தில் ஊழலில் திளைத்தவர்களை தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.
அதே போல் ஊழலை கலைவதாக பேசும் ராகுல்காந்தி, பீகார் மாநிலத்தில் ஊழல் குற்றஞ்சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்த லாலுபிரசாத்துடன் கூட்டணி வைத்துக்கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளார். பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் பேச்சுக்கும் செயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதனையே இது எடுத்துக்காட்டுகிறது.
எனவே ஊழலைப்பற்றி பேச இரண்டு கட்சிகளுக்கு தார்மீக உரிமை இல்லை. தில்லியில் புதிதாக ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் காங்கிரஸ் ஆதரவை பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு அளித்துள்ள ஆதரவை திரும்பப்பெறும். காங்கிரஸ் அரசு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெற்று பல ஆட்சிகள் கவிழ்ந்துள்ள வரலாறுகள் உள்ளன என்றார் அவர்.

No comments:

Post a Comment